Thursday, 2 October 2014

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்திய வீராங்கனை மேரி கோம், சீனாவின் ஹைகோவ் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேரி கோம் தனது அபார திறனால், 48 கிலோ எடைப் பிரிவிலான இறுதி ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் மியாங் சிம்மை வீழ்த்தினார். வறுமை ஒருபக்கம், சவால்கள் இன்னொரு பக்கம் என பயிற்சியைத் தொடங்கிய கோம் சர்வதேச அங்கீகாரத்துக்காகப் போராடினார். இறுதியில் ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட மேரி கோம்..

ஆயுத பூஜை - சர‌ஸ்வ‌‌தி பூஜை வாழ்த்துகள்..

அக்டோபர் 2: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று..

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு
* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!
* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!
* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

Tuesday, 30 September 2014

All the striking employees assembled at flower bazaar Telecom complex at 11am and heard with rapt attention of the leaders on strike issues. Today in Chennai Telephones from11-13 hrs, 15-17hrs and 21-23hrs thousands of employees went on two hours walkout strike.


போராட்டம் முழுவெற்றி!!

சென்னை தொலைபேசியில் அனைத்து அலுவலங்களிலும் வெளிநடப்பு வெற்றிகரமாக நடந்ததாக செய்தி கிடைத்துள்ளது. கிண்டி பகுதியில் அனைத்து மூன்று மற்றும் நான்காம் பிரிவு தோழர்கள் முழுமையாக தங்களை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வெளிநடப்பு போராட்டத்தில் அனைத்து சங்கத்தின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். பங்கு பெற்ற அனைவரையும் காஞ்சி மாவட்டச் சங்கத்தின் சார்பாக நன்றியினை சமர்ப்பித்து கொள்கிறோம்
Monday, 29 September 2014

இன்று கிண்டி பகுதியிலே கூட்டு போராட்டக்குழு சார்பாக நாளை நடைபெறும் வெளிநடப்பு பற்றியும் 30 அம்ச கோரிக்கை விளக்கக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் NFTE-BSNL சங்கத்தின் சார்பாக நமது மாநிலச் செயலர் சி.கே.மதிவாணனும் , BSNLEU சங்கச்சார்பாக அதன் மாநிலச்செயலர் கோவிந்தராஜனும் சிறப்புரை ஆற்றினார்கள்.கூட்டத்தில் திரளான தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.

JAC இடைவேளை கோரிக்கை விளக்கக் கூட்டம் -                                      காஞ்சிபுரம்

இன்று காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் 30அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இரண்டுமணி நேர வெளிநடப்பு பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நமது மாநிலத் தலைவர் எம்.கே.ராமசாமி மற்றும் எம்ப்ளாயீஸ் யுனியன் மாநிலத் தலைவர் கன்னியப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்
Sunday, 28 September 2014

           

JAC சார்பாக கோரிக்கை விளக்கக் கூட்டம்

நேரம்: மதியம் 1 மணி

நாள்: 29-09-2014

இடம்: கிண்டி சவுத் பொதுமேலாளர் அலுவலகம்

சிறப்புரை:தோழர்.சி.கே.எம்


இடம்: காஞ்சிபுரம் தொலைபேசி வளாகம்

சிறப்புரை: தோழர்.எம்.கே.ராமசாமி

அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

=========================================================================BSNL  நிர்வாகமே...
 • ஒரு மாத சம்பளம் குறைந்தபட்ச போனசாக வழங்கு..
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி, போனஸ்,EPF,ESI சலுகை வழங்கு 
 • LTC , மருத்துவப்படியை மறுபடியும் வழங்கு..
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 01/01/2007 முதல் 78.2 சத IDA  இணைப்பை வழங்கு.
 • ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை தீர்த்து வை..
 • SC/ST  தோழர்களுக்கு பதவி உயர்வு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்
 • நாலு கட்டப்பதவி உயர்வு பிரச்சினைகளை தீர்த்து வை..
 • நாலாவது கட்டப்பதவி உயர்வுக்கு அதிகாரிகளின் சம்பள விகிதம் வழங்கு 
 • TTA  தோழர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்த்து வை...
 •  BSNLலில் பணியமர்ந்த தோழர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்து..
 • பதவிகளுக்கு புதிய பெயர் மாற்றம் செய்..

செப்டம்பர்  30 

JAC

அனைத்து ஊழியர் சங்க 

கூட்டு நடவடிக்கைக்குழு 

அறைகூவலின்படி 

நாடு தழுவிய  வெளிநடப்பு 


30/09/2014 - செவ்வாய்க்கிழமை
காலை 11.00 மணி முதல் 
பிற்பகல் 01.00 மணி வரை...

தோழர்களே...
நியாயமற்ற நிர்வாக 
நடப்பைக் கண்டித்து..
வேகம் கொண்டு..
கோபம் கொண்டு..
செய்திடுவோம்..

வெ ளி ந ட ப் பு ..